இங்கிலாந்தில் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பல குற்றங்களைத் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லும் தனது மகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தைப் பற்றி பிரதமர் ரிஷி சுனக் பேசியுள்ளார்.
பல பெண்களும் சிறுமிகளும் தங்களுக்குப் பாதுகாப்பாக உணரவில்லை என்பதை கடந்த ஆண்டு நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன” என்று கூறிய பிரதமர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிவர்பூலில் ஒன்பது வயது ஒலிவியா பிராட்-கார்பெல் தனது வீட்டில் சுடப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் எனது குழந்தைகள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக நடமாடுவதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன்” என்று பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.