Home தாயக செய்திகள் யாழ் – திருநெல்வேலி சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் பாலியல் துன்புறுத்தல்:

யாழ் – திருநெல்வேலி சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் பாலியல் துன்புறுத்தல்:

41
0

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து இல்லத்தில்குறித்த சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய நபரையே நேற்று இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.