கடந்த ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சி டிப்போச் சந்தியில் இடம்பெற்ற கொலை சம்பத்தின் பிரதான சந்தேகநபரை கொழும்பில் வைத்துக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்ட நபர் குறித்த விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை.
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியைச் சேர்ந்த 33 வயதான ஜெ.ஜெயகரன் என்பவரே குறித்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவராவார்.