Home செய்திகள் மட்டக்களப்பு – பட்டாபுரத்தில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்!

மட்டக்களப்பு – பட்டாபுரத்தில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்!

58
0

மட்டக்களப்பு – போரதீவுப் பற்றுப்பிரதேசத்திற்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் உள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில் புதன்கிழமை அக்கிராமத்திலுள்ள நீர் நிலையில் சடலம் ஒன்று தென்படுவதாக அதனை அவதானித்தவர்கள் தெரிவித்ததையடுத்து, அங்கு விரைந்த களுவாஞ்விகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு சடலத்த மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் குன்றியவர் எனவும் பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகசன் சூரியகுமார் என அடையாளர் காணப்பட்டுள்ளார்.