வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இறந்துள்ளார். தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் படுத்திருந்துள்ளார்.
உணவு வாங்கிக் கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சல் காரணமாக குறித்த ஆசிரிய மாணவன் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் விவசாய பாடப் பிரிவின் முதலாம் வருட ஆசிரிய மாணவனான மட்டக்களப்பு, காரைத்தீவினை சேர்ந்த ஜிந்துஜன் என்பவரே மரணமடைந்தவராவார்.
கொரோனா நோய் பரவல் மற்றும் அதனோடு கொண்டுவரப்பட்ட கட்டாய தடுப்பூசிகளின் பின்னர் பல நாடுகளில் இவ்வாறான திடீர் மரணங்களும், கண், தலை, மூட்டு, இடுப்பு என பல இடங்களில் வலிகளும், உடற் சோர்வும், பலருக்கு திடீர் மாரடைப்பும் வந்து மரணமாகிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.