மன்னார் மாவட்டத்தில் காணப்படும் காணி உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்ட குழுவினரிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்தே இந்த பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் அருட்தந்தை ஜொய்ஸ் பெப்பி சொசாய், அருட்தந்தை ஆண்டனி சொசாய் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.