பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குலில் பாகிஸ்தான பொலிஸ் அதிகாரிகள் 6 பேர் உயிரிழந்தள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள கைபகர் பக்துன்கவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஷஹாப் கேல் எனும் கிராமத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மீது இன்று காலை இத்தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 6 பொலிஸார் உயிரிழந்தனர் என மாவட்ட அதிகாரி ஒருவர், ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலிபான் இயக்கம் 2007 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கத்துக்கு பாகிஸ்தான் தலிபான் இயக்கம் பகிரங்கமாக விசுவாசம் தெரிவித்திருந்தது. எனினும், இவ்விரு இயக்கங்களும் தனித்தனியாக செயற்படுகின்றன.