கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் ஆளுகைக்கு கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றம் கோரி கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே சீரழிக்காதே எமது சமூகத்தை சீரழிக்காதே, என பல கோஷங்களை தாங்கிய பாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்திரியின் மிக மோசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பரவி வரும் வேளையில் இந்த வைத்தியரிடம் எவ்வாறு பரிசோதனை நிலை மேற்கொள்வது எமக்கு பயமாக உள்ளது! நாங்களும் சமூக வலைத்தளங்களும் எங்கள் படங்களை எடுத்துத்து போட்டு விடுவார் என்ற அச்சத்தின் மத்தியில் எவ்வாறு சிகிச்சைக்கு செல்வது என்ன மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.