Home செய்திகள் ஹிருணிக்கா உள்ளிட்ட 13 பேரும் பிணையில் விடுதலை:

ஹிருணிக்கா உள்ளிட்ட 13 பேரும் பிணையில் விடுதலை:

50
0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 13 பேரையும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இன்று (15) உத்தரவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நேற்று சுதந்திர சதுக்கத்தில் இருந்து கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை நடத்திய போது, கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஹிருணிகா உள்ளிட்டோர் நேற்று (14) மாலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.