தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்புக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.