வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.