நாளை முதல் யாழ் – கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் முகமாலை மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் பரிசோதனைக்குட்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களும் நாளை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளது.
அதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் புளியங்குளப் பகுதியில் 20 நிமிடங்கள் நிறுத்தி மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரான வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.