ஆலயமொன்றில் இடம்பெற்றுவரும் நிர்வாக மோசடிகள் தொடர்பில் அண்மையில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து முறைப்பாடு வழங்கிய நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட குறித்த வாள்வெட்டுத் தாக்குதலில் 42 வயதான நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.