Home செய்திகள் போராட்டத்தின் போது மக்களால் சிதைக்கப்பட்ட அமரர் டி.ஏ.ராஜபக்‌ஷவின் உருவச்சிலை மீண்டும் திறந்து வைப்பு!

போராட்டத்தின் போது மக்களால் சிதைக்கப்பட்ட அமரர் டி.ஏ.ராஜபக்‌ஷவின் உருவச்சிலை மீண்டும் திறந்து வைப்பு!

43
0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த மே 9ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது சிதைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தையாரான அமரர் டி.ஏ.ராஜபக்‌ஷவின் உருவச்சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்டுள்ள அமரர் டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை தங்காலை நகரில் அமைந்துள்ள ஏற்கனவே அவரது உருவச்சிலை இருந்த இடத்தில் மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷபின் புதல்வாரன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மேற்படி உருவச் சிலையை சிதைப்பதற்காக அன்றை தினம் திட்டமிட்டு குழுவொன்று செயற்பட்டதாகவும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் கிளர்ச்சியின் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில் இடைத்தரகராக சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கி ஜனாதிபதி பதவியை தனதாக்கி கொண்ட ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சேக்களுடன் கைகோர்த்தே அடக்குமுறை ஆட்சியை நடாத்திவருவது இச் சிலை திறப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.