மாவீரர்களை நினைவுகொள்ளும் புனித நாளான நவம்பர் 27 ஐ முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிரமதானங்கள், மர நடுகைகள், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் என மக்கள் ஆர்வம் காட்டிவரும் னிலையில் அதை தடுக்கவும், மக்களை அச்சுறுத்தி எழுச்சியை குறைக்கவும் போதைப்பொருளை காரணம் காட்டி யாழ் மாவட்டம் எங்கும் மீண்டும் இராணுவ காவலரண்கள் முளைத்துள்ளன.
வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உயிர்கொல்லி போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்படுத்துவோர் கைது செய்யப்பட உள்ளதாகவும் இராணுவத் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்தார்.
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ள சோதனை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.