Home தாயக செய்திகள் கடவுச்சீட்டு வழங்குதல் தற்காலிக இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு வழங்குதல் தற்காலிக இடைநிறுத்தம்!

49
0

இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்றையதினம் (08) குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையிலுள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இவ்வாறு கடவுச்சீட்டு வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பங்கள் மறு அறிவித்தல் வரை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என திணைக்களம் தெரிவித்துள்ளது.