வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் அதிகரித்துள்ள நிலையில் அது தற்போது தெற்கு நோக்கி வவுனியா வரை அதிகரித்துள்ள நிலையில், அவை சிங்கள மக்களை பாதிக்காமல் கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா, நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
வடக்கில் அப்பப்பொ ஆங்காங்கே போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டாலும், கடூப்படுத்தப்படவில்லை என்பதும், மாறாக போதைவஸ்து கடத்தலும், பாவனையும் அதிகரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது திட்டமிட்டு தமிழர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்வையும், கலாச்சாரத்தையும் சீரழிக்கும் னோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.
வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் நேற்று (04) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அண்மைக்காலமாக வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப் பாவனை அதிகரித்துள்ள நிலையில், இதை கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன் வீதியில் சென்ற பேரூந்துகள், சொகுசு வாகனங்கள்ட என்பவற்றை மறித்து சோதனையிட்டதுடன், சந்தேகத்திற்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் சோதனையிட்டனர்.