வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று (05) சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்தே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
இதன்போது பஸ் சாரதியான ரூபன் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.