ஆசிரியர்களின் உடைகள் மற்றும் மாணவர்களின் சீருடைகளில் எந்தவொரு காரணத்திற்காகவும் எத்தகைய மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் உடைகளில் மாற்றம் ஏற்படுத்தி பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதற்கு வசதியான உடைகளை அவர்கள் அணிவதற்கு இடமளிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் நேற்று (04) இவ்வாறு தெரிவித்தார்.
எளிதான உடைகளுக்கு அனுமதி வழங்குவது கலாசார சீர்கேட்டுக்கே வழிவகுக்கும் என மதத்தலைவர்கள் தெரிவித்துள்ள அதேவேளை பெரும்பாலான ஆசிரியர்களும் உடைகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும், அதற்கிணங்க எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.