இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்கள் உயிர்களை காக்க படாத பாடு பட்டுவரும் நிலையில், மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் கடை நடத்திவந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த நபரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.