ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (02) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் படு காயமடைந்துள்ளனர்.
அதிவேகமாக வந்த இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டத்தில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.