Home செய்திகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மீளவும் வருகை தந்துள்ள மக்களுக்கான நடமாடும் சேவை:

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மீளவும் வருகை தந்துள்ள மக்களுக்கான நடமாடும் சேவை:

37
0

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மீளவும் வருகை தந்துள்ள மக்கள் தமது ஆவணங்களை இலகுபடுத்தும் முறையிலான நடமாடும் சேவை நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியது.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த நடமாடும் சேவை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் நீதி அமைச்சர் செயலாளர் வசந்தபெரேரா, நீதி அமைச்சர் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், மற்றும் ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.