ஹிக்கடுவை பகுதியில் இன்று (31) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திராணகம பிரதேசத்தில் காலி – கொழும்பு வீதியில் ஹிக்கடுவை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 26, 47 வயதான இருவர் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சடலங்கள் தற்போது கராப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு விட்டு ஹிக்கடுவை திசை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மரணமடைந்தவரகள் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கொன்று தொடர்பில் நீதிமன்றிற்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.