Home உலக செய்திகள் தென்கொரியாவில் – சனநெரிசலில் சிக்குண்டு இலங்கையர் உட்பட 150 பேர் பலி!

தென்கொரியாவில் – சனநெரிசலில் சிக்குண்டு இலங்கையர் உட்பட 150 பேர் பலி!

52
0

தென்கொரிய தலைநகர் சியோலில் ஹலோவீன் நிகழ்வின் போது சனநெரிசல் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்குண்டு இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கண்டியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை  தொடர்புகொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் வேறு எவராவது உயிரிழந்துள்ளனரா காயம்பட்டுள்ளனரா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

தென்கொரிய தலைநகரில் ஹலோவின் நிகழ்வின் போது பெருமளவு மக்கள் திரண்டதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளனர்.