Home செய்திகள் வாகன உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக (இ.போ.ச) பாடசாலை பேரூந்துகள் இடைநிறுத்தம்:

வாகன உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக (இ.போ.ச) பாடசாலை பேரூந்துகள் இடைநிறுத்தம்:

42
0

வாகன உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பஸ் வண்டிகள் உள்ளிட்ட பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொடக்கவெல டிப்போ ஊடாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டவந்த 5 பாடசாலை பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று பல்வேறு டிப்போக்களுக்குச் சொந்தமான பஸ் வண்டிகளும் பொதுப் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.