நாட்டில் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமை மா மனித பாவனைக்கு உகந்ததாக இல்லை. அவற்றில் அதிகளவில் வண்டுகளும், புழுக்களும் காணப்படுகின்றன.
எனவே கோதுமை மா களஞ்சிய சாலைகளில் துரித பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரத்தை தர நிர்ணய சபைக்கு வழங்குமாறும் அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கதின் தலைவர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தரமற்ற கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (27) வியாழக்கிழமை பிரீமா நிறுவனம், மற்றும் தர நிர்ணய சபை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.