Home செய்திகள் புற்று நோயிற்கான மருந்துகள் இல்லை – அவதியுறும் நோயாளர்!

புற்று நோயிற்கான மருந்துகள் இல்லை – அவதியுறும் நோயாளர்!

56
0

புற்று நோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாககவும், இதனால் புற்று நோய் சிகிச்சைப் பிரிவுகளில் அதிகளவான நோயாளிகள் போதிய சிகிச்சை இன்றி இக்கட்டான நிலையில் உள்ளதாகவும், அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ திலகரட்ண தெரிவித்தார்.

அரச மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணயம் அவ்வப்போது மருந்துகளின் விலையை கணக்கின்றி உயர்த்துவதால் கிட்டத்தட்ட 300% மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது.

இதனால் அரச மருத்துவமனைகளில் முடிவடைந்துள்ள சுமார் 15 வகை மருந்துகளை மக்கள் சிகிச்சைக்காக அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுவதாகவும், வசதி இல்லாதவர்கள் மருந்துகள் இன்றி உயிர் ஆபத்தை எதிர் நோக்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.