மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா தியாகலிங்கம் கோரிக்கையை விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீனவர்களுக்கு ஓரளவுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெயை பயன்படுத்தி விவசாயிகள் பலர் விவசாயம் செய்கின்றார்கள். ஆனால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை.
விவசாயத்துக்குரிய களைநாசினிகள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடாக இருப்பதுடன் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றது. நியாயமான விலையில் விவசாயத்துக்குரிய உள்ளீடுகளை அரசாங்கம் வழங்கவேண்டும் – என்றார்.