நாட்டில் தினமும் இடம்பெற்றுவரும் விபத்துக்களில் 40% உந்துருளிகள் (motorcycle) தொடர்புடையதாக இருப்பதாக தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அன்டன் டி மெல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டி மெல் மேலும் தெரிவித்தார்.