இலங்கையில் – இலஞ்சம் அதிகமாக பெறப்படும் நிறுவனங்களில் “பிரதேச சபைகளே” முதலிடத்தில் இருப்பதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.
மக்கள் அதிகமாக தொடர்புபடும் நிறுவனங்களான பொலிஸ் (காவல் திணைக்களம்), கல்வி (மாணவர் மற்றும் ஆசிரியர் நியமனம்), சுங்கம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி சபைகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் நிறைந்ததாக காணப்படும் போதிலும் முதலிடத்தில் பிரதேச சபைகளே அதிக இலஞ்சம் மற்றும் ஊழல் நிறைந்த நிறுவனமாக விசாரணைகளில் கண்டறிபப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.