இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் நிர்வாக சபை கூட்டம் இடம்பெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக உள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்த பதவியிலிருந்து விலகுவதாகவும் வேறு ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்ள பட்டதற்கு அமையவே சாகல ரத்நாயக்க நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வாரத்தில் ஹரின் பெர்னாண்டோ உத்தியோகபூர்வமாக அறிவிப்பு கட்சியின் நிர்வாக சபைக்கு வழங்கிய பின்னர் அந்த பதவிக்கு சாகல ரத்நாயக்க நியமிக்கப்படுவார்.