இந்தியாவில் முதன்மை கொண்டாட்ட திருநாளாக வருடம் தோறும் இடம்பெற்றுவரும் தீபாவளி திருநாளையும், அதோடு தொடர்ந்து வரும் கெளரி விரதத்தையும் முன்னிட்டு இன்று(22.10.22) முதல் 6 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் திரியோதசி கௌரி விரதம் என்று ஐந்து தினங்கள் கொண்டாடுகிறார்கள். தென்னிந்தியர்கள் தனியான கெளரி விரதமாக கடைப்பிடிக்கிறார்கள்.
22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை
23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
24.10.2022 – தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் விடுமுறை
25.10.2022 – லக்ஷ்மி பூஜை காங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர் வங்கிகளுக்கு விடுமுறை
26.10.2022 – கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை
27.10.2022 – சித்ரகுப்த் ஜெயந்தி, காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.