Home செய்திகள் நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் குருநகரில் கைது:

நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் குருநகரில் கைது:

50
0

மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநகர் 5 மாடி பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஒஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.