பிரித்தானிய பிரதமரின் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் உடனடியாக பொதுத் தேர்தலை நடாத்துமாறு எதிர்க்கட்சியான தொழில்கட்சியின் தலைவர் Keir Starmer கோரிக்கை விடுத்துள்ளார்.
சரியான தலைமை இல்லாத ஸ்திரத்தன்மையற்ற ஆளும் கட்சியான கன்சவேட்டிவ் கட்சியை நம்பி இந்த நாட்டை மேலும் அழிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இம்மாதம் 28ஆம் தேதிக்குள் (ஒரு வாரத்திற்குள்) புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது கன்சவேட்டிவ் கட்சியின் தலைமைத் தேர்தல் இதுவாகும்.