போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பாவனை என்பன அண்மைக் காலமாக யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் நிலையில் ஒரு பெண் உட்பட நால்வரை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று (19) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணையும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 200 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம் (19) புதன்கிழமை 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பதோடு, குறித்த மூவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.