Home உலக செய்திகள் பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

48
0

பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்ததால் பணவீக்கம் மீண்டும் 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI )ஆண்டு அடிப்படையில் 10.1 சதவீகிதமாக அதிகரித்துள்ளது, அத்துடன் இந்த விலை குறியீடு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.9 சதவீகிதமாக இருந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் மாத விலை குறியீடு அதிகரிப்பானது, கடந்த ஜூலை மாதத்துடன் பொருந்தியுள்ளது, இதனால் பிரித்தானியாவின் பணவீக்கம் புதிய 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

உணவு மற்றும் மது அல்லாத பானங்களில் விலைகள் 14.5 சதவீதம் வரை உயர்வை கண்டதே செப்டம்பரில் பணவீக்கத்தின் மிகப்பெரிய உந்துதலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CPI இன் வரலாற்று மாதிரி மதிப்பீடுகளின்படி இது ஏப்ரல் 1980 க்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செப்டம்பரில் ஹோட்டல் விலைகளும் அதிகரித்தன என்று ONS தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் விலைவாசி உயர்வு மற்றும் அதிக எரிசக்தி கட்டணம் ஆகியவற்றுடன் போராடி வருவது புரிவதாக பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சர் ஜெரிமி ஹண்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், இந்த அரசாங்கம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான உதவிக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும் நீண்ட கால வளர்ச்சியை உந்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸின் வரி தள்ளுபடி அறிக்கையை தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது, ஆனால் அவற்றில் தற்போது பெரும்பாலானவை விலகி கொள்ளப்பட்டுள்ளது, அத்துடன் குவாசி குவார்டெங்க்கிற்கு பதிலாக ஜெரிமி ஹண்ட் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.