இந்தோனேசியாவில் 99 குழந்தைகளின் இறப்பை அடுத்து, அனைத்து சிரப் மற்றும் திரவ மருந்துகளின் விற்பனையை நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாக அமைந்த சில “சிரப் மருந்துகளில்” சிறுநீரகங்களை பாதிக்கும் (AKI) தொடர்புடைய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசியா கூறியுள்ளது.
இந்தோனேசிய சுகாதார அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கையில், சுமார் 200 குழந்தைகளில் (AKI) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ஐந்து (5) வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்தனர்.
குறித்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.