கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் 06 கடற்படை வீரர்களுடன் காணாமல்போயிருந்த படகுடன் 30 நாட்களுக்கு பின்னர் நேற்று(18) மீண்டும் தொடர்பு கிடைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறூப் கெப்டன் இந்திக்க டி சில்வா நேற்று தெரிவித்தார்.
“படகில் உள்ள ஆறுபேருடன் நேற்று தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு என்னவானது? ஏன் இவ்வாறு தொடர்பு துண்டிக்கப்பட்டது? எங்கு இருக்கிறார்கள் என்ற விபரங்கள் எதுவும் தற்போது தெரியவில்லை” எனக் கூறிய அவர், கடற்படை வீரர்களை அழைத்துவரும் நடவடிக்கை முன்னனெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் கரைக்கு திரும்பியதன் பின்னரே மேலதிக விபரங்களை கூறமுடியுமென தெரிவித்த அவர் இன்று (நேற்று 18) இரவு அவர்கள் கரைக்கு திரும்பலாமென தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.