Home செய்திகள் நீர்வேலியில் – 27 வயதுடைய இளைஞன் மர்ம மரணம்!

நீர்வேலியில் – 27 வயதுடைய இளைஞன் மர்ம மரணம்!

40
0

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தார்.

வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனாவைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.