Home செய்திகள் விலகினார் சாணக்கியன் – இடத்தை நிரப்பிய சிறீதரன்: பிரதி சபாநாயகர் அறிவிப்பு

விலகினார் சாணக்கியன் – இடத்தை நிரப்பிய சிறீதரன்: பிரதி சபாநாயகர் அறிவிப்பு

37
0

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோப்) உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  இராசமாணிக்கம் சாணக்கியன்  விலகியுள்ளதாக்  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார்.

கோப் குழுவின் உறுப்பினர் பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ். சிறீதரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகரின் அறிவித்தலின் போதே அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விலகியுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார்.  

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட  வெற்றிடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக   பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார்.