தனுஷ்கோடியை அண்மித்த ஒன்றாம் மணல் திட்டில் தரையிறங்கி தவித்துக்கொண்டிருந்த இலங்கை அகதிகள் 6 பேரை இன்று (17) திங்கள் அதிகாலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அங்கு விசாரணைகள் , மற்றும் பதிவுகள் முடிவுற்ற பின் குறித்த 6 இலங்கை அகதிகளையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிரது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு உள்ளாகி மன உழைச்சலுக்குள் தளப்பட்ட நிலையில், தங்கள் உயிர்களை காக்கும் நோக்குடன் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.