வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (17) கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டனர்…? அவர்களுக்கு என்ன நடந்தது..? என்பதை கண்டறிய சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும். தமக்கு பதிலும், நீதியும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியே இன்றைய தினம் ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.