Home செய்திகள் ஶ்ரீலங்கா இராணுவ போர் கல்லூரிக்கு பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் விஜயம்!

ஶ்ரீலங்கா இராணுவ போர் கல்லூரிக்கு பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் விஜயம்!

42
0

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரித்தானிய இராணுவத்தின் கர்னல் பால் கிளேட்டன் MBE அவர்கள் கடந்த வியாழக்கிழமை (13) அன்று புத்தளம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீலஙா இராணுவப் போர்க் கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு விஜயம் செய்த கர்னல் கிளேட்டன் இராணுவப் போர்க் கல்லூரியின் பாடத்திட்டம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விளக்கத்தைப் பெற்றதோடு, பயிற்சி விஷயங்களுடன் தொடர்பான உதவிகளை வழங்குவது குறித்தும் விவாதித்தார்.