யாழ் – நவாலி (அட்டகிரி) பகுதியில் காணியொன்றில் இருந்து 111 கைக்குண்டுகள் யாழ் மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்ட்டுள்ளன.
குறித்த காணியை அதன் உரிமையாளர் விவசாயத்திற்காக உழவு செய்த போதே தென்பட்ட கைக்குண்டுகளை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைத்து வைக்கப்பட்டுள்ளமையால் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டது.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.