சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் காரணமாக எந்த வகையிலாவது பாதிப்புக்குள்ளாகும் துறைகள் தொடர்பிலும், கடன் ஸ்திரத்தன்மையின் தொடர்புடைய யோசனைகள் அடங்கிய விரிவான அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் முன்வைக்க பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான தேசிய சபையின் உப குழு தீர்மானித்துள்ளது.
அத்துடன் பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான தேசிய சபையின் உப குழுவுக்கு பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ள புதிய டிஜிட்டல் தளம் அறிமுகப்படுத்தப்படும் என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற உப குழுவின் கூட்டம் கூடிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.நாட்டின் தற்போதைய கடன் நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்படும் போது ஏற்படும் கொள்கை ரீதியான நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஏதிர்வரும எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் தற்போதைய நிலைமையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன்கள் திணைக்களத்தின் கலாநிதி எம்.இஸட்.எம் ஆஸீம் தெரிவித்தார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதற்கு டொலருக்கு நிகராக ரூபாவை பேணுதல்,வரிகளை அதிகரித்தல்,இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதித்தல் ஆகியவற்றால் ஏற்படும் சமூகம் சார் பிரச்சினைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.இந்த நிலைமைக்கு ஒப்பீட்டளவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் வீழ்ச்சியடைதல்,வேலையின்மை அதிகரித்தல்,வறுமை அதிகரித்தல் ஆகியவற்றால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் குறித்தும் இதன்போத அவதானம் செலுத்தப்பட்டது.
நாட்டின் குடும்பங்கள் தொடர்பான ஆய்வை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கமாறு குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நிதி அமைச்சுக்கும்,தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்துக்கும் ஆலோசனை வழங்கினார்.இந்த ஆய்வு கடந்த மூன்று வருடங்களாக மேற்கொள்ளப்படவில்லை,ஆகவே தற்போது ஆய்வை மேற்கொள்வதன் மூலம் சமூக வீழ்ச்சியை விளங்கிக்கொள்வதுடன் அது எதிர்கால கொள்கை வகுப்பிற்கு சாதகமாக அமையும் எனவும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் காரணமாக எந்தவகையிலாவது பாதிப்புக்குள்ளாகும் துறைகள் தொடர்பிலும்,கடன் ஸ்தீரத்தன்மையுடன் தொடர்புடைய யோசனைகள் அடங்கிய விரிவான அறிக்கையை எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் முன்வைக்க குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.