கனடாவில் மார்கம் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற கோரவிபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரொறன்ரோ மார்க்கம் வீதியில் நேற்றுமுன்தினம் பிற்பகலில் மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்புக்கு அண்மையில் கனரக வானம் ஒன்று குறித்த இளையோர் பயணித்த வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாழ்பாணத்தின் சுதுமலையை பூர்வீகமாக கொண்ட புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் இரு பிள்ளைகளான நிலா, பாரி ஆகிய இருவரும் மரணம் அடைந்தார்கள்.
இந்த விபத்தில் மற்றொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்த விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.