Home செய்திகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை வலியுறுத்தி 73 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை வலியுறுத்தி 73 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்!

33
0

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை வலியுறுத்தி கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 73 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் குறித்த போராட்டம் இன்று புதன்கிழமை (12) காலை 9.45 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் மன்னார் நகரில் பிரதேச பகுதியிலிருந்து நாலா பக்கங்களிலிருந்தும் வந்த மக்கள் தங்கள் உரிமைகளுக்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.