ரயில் ஒன்று வெல்லவ பகுதியில் தடம் புரண்டதால், இலங்கையின் வட பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கோட்டை நோக்கி செல்லும் ரயில்கள் மஹவ வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து வடக்கு பாதையில் செல்லும் ரயில்கள் குருநாகல் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.