இலங்கையின் வடபகுதியான மாதகல் பிரதேசத்தை அண்மித்த “திருவடி நிலை” கடற்பரப்பில் ஆணொருவரின் சடலம் நேற்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் இருந்ததை அவதானித்த மீனவர்கள் இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
அதன் பின்னர் சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.