இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து தரப்பினரும் இழைத்த மனித உரிமை வன்முறைகள் துஸ்பிரயோகங்கள் குறித்து முழுமையான பொறுப்புக்கூறும் செயல்முறைiயின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் புதிய தீர்மானம் சுயாதீனமான பக்கச்சார்பற்ற வெளிப்படையான உள்நாட்டு பொறிமுறைகள் காணப்படாமையை சுட்டிக்காட்டியுள்ளது.
பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் அவசியம் குறித்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் வலியுறுத்துகின்றது.
பொறுப்புக்கூறலை முன்னோக்கி நகர்த்துவதற்காக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்து பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல் ஒருங்கிணைத்தல் பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல்ஆகியவை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் திறனை வலுப்படுத்த விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தொடர்பான தீர்மானம் தெரிவித்துள்ளது.
இலங்கையில்இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச சட்டங்கள் பாரதூரமாக மீறப்பட்டமை தொடர்பிலான எதிர்கால பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் குறித்த மூலோபாயங்களை உருவாக்குவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் தப்பிப்பிழைத்தவர்களிற்காக பரப்புரை செய்வதற்கும் மற்றும் பொருத்தமான நீதித்துறை உறுப்புநாடுகளின் ஏனைய செயற்பாடுகளிற்கு ஆதரவளிப்பதற்கும் ; மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் திறனை வலுப்படுத்த விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தொடர்பான தீர்மானம் தெரிவித்துள்ளது.